மதுரையில் வளர்ச்சிப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரையில் வளர்ச்சிப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

மதுரையில் வளர்ச்சிப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை மத்திய தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் பழனிவேல் தியாகராசன் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சரும், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநகராட்சி வார்டு எண் 9 அருள்தாஸ் புரம் பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கழிப்பறையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஒரு நாள் இலவச தடுப்பூசி முகாமினை பார்வையிட்டார். தொடர்ந்து வார்டு எண் 82 கந்தசாமி பிள்ளை காம்பவுண்ட் பகுதியில் 6 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலையை திறந்துவைத்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்.

மாநகராட்சி வார்டு எண் 81ல் 5 லட்சம் மதிப்பீட்டில் வைரவன் செட்டி தெருவில் பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்தார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!