மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

மதுரை மத்திய தொகுதியில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மதுரை மத்திய தொகுதியில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட தானப்ப முதலி தெரு, பால் மீனாஸ் திருமண மண்டபத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை 34 பயனாளிகளுக்கு 4 லட்சத்து எட்டாயிரம் மதிப்பிலும், ஆதரவற்ற விதவை உதவித் தொகை 30 பயனாளிகளுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், கணவனால் கைவிடப்பட்ட உதவித்தொகை ஐந்து பயனாளிகளுக்கு 60 ஆயிரம் மதிப்பிலும், முதிர்கன்னி உதவித்தொகை ஒரு பயனாளிக்கு 12 ஆயிரம், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை 10 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், நலத்திட்டங்கள் 80 பயனாளிகளுக்கு 9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது.

தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த இரண்டு பயனாளிகளின் குடும்பத்திற்கு 50 ஆயிரமும் சிறந்த தரத்திலான கல்வி பெரும் திட்டத்தின்கீழ் ஒரு பயனாளிக்கும், 23 ஆயிரத்து 320 ரூபாய் மற்றும் ஓய்வூதியம் பெறும் இருபத்தி ஒன்பது பயனாளிகளுக்கு 3 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயும் மொத்தம் 32 பயனாளிகளுக்கு 4 லட்சத்து 21320 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக, தையல் இயந்திரம் 10 பயனாளிகளுக்கு 52 ஆயிரத்து 870 ரூபாய் மதிப்பிலும், இருசக்கர வாகனம் இரண்டு பயனாளிகளுக்கு 1 2 900 மதிப்பிலும், மூன்று சக்கர வாகனம் இரண்டு பயனாளிகளுக்கு 15 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பிலும், மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் மூன்று பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 8 65 ரூபாய் மதிப்பிலும், மொத்தம் 17 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 66 ஆயிரத்து 935 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், விலையில்லா தேய்ப்பு பெட்டி 9 பயனாளிகளுக்கு நாற்பத்தி எட்டாயிரத்து எழுபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலும், மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக 25 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையும் வழங்கப்பட்டது.

அட்மா திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு பத்தாயிரம் ரூபாயும் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் நான்கு பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மொத்தமாக 168 பயனாளிகளுக்கு18 லட்சத்து 50ஆயிரத்து ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கி விழா பேருரை நிகழ்த்தினார்.

அவர் பேசுகையல், சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பொது வாழ்க்கைக்கு வந்தேன் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்ற பொது கணக்கு குழு உறுப்பினர், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆகிய பொறுப்பை தலைவர் எனக்கு வழங்கினார்.

எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது கிடைத்த வாய்ப்பை விட அதிகமான வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. சமூகத்தின் அடையாளம் என்பது மாற்றுத் திறனாளிகள் முதியோர்கள் உள்ளிட்டவர்களை எந்த அளவு அரவணைத்துச் செயல்படுகிறோம் என்பதுதான் நல்ல சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டு. இன்றைக்கு கழக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பொருளாதார வல்லுனர்கள் குழு இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்கள். இதே வழியில்தான் நலிந்தோர் களை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்வதில் கழக அரசு செயல்படுகிறது என அவர் பேசினார்.

Tags

Next Story