ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைக் கூடாது என தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:

மத்திய அரசின் தனியார்மய கொள்கையை எதிர்த்து எஸ்ஆர்எம்யூ தொழில்சங்கத்தினர் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் தனியார்மய கொள்கையை கண்டித்து ,மதுரை ரயில் நிலையம் அருகில் எஸ்.ஆர்.எம். யூ. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
இதில், லாபத்தில் இயங்கும் விரைவு ரயில்கள் மற்றும் வழித்தடங்களை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும், சரக்கு போக்குவரத்து ரயிலை தனியாருக்கு விற்கக்கூடாது, ரயில்வே குடியிருப்புகளை, ரயில் நிலைய விளையாட்டு மைதானங் களையும் ரயில் நிலைய வளாகங்களை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu