மதுரை மீனாட்சியம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம்: ரூ. 10 கோடியில் சீரமைப்பு

மீனாட்சி அம்மன் கோவில் புனரமைப்பு பணிகளை 36 மாதத்தில் முடிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீர வசந்த ராயர் மண்டபத்தை புனரமைக்க 10 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது:

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீரவசந்த ராயர் மண்டபத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பயங்கர தீ விபத்தில் மண்டபம் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதைதயடுத்து, மண்டபத்தை புனரமைக்க தமிழக அரசு சார்பாக, 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாக பணி தொடங்கப்படவில்லை.

கடந்த சில மாதத்திற்கு முன் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து கற்கள் தேர்வு செய்யப்பட்டு, மதுரை செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு செய்த அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, விரைவில் பணி தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புனரமைப்பு பணிக்கு ஒப்பந்த புள்ளியை கோவில் நிர்வாகம். வெளியிட்டது. ஒப்பந்த புள்ளி விண்ணப்பம் திரும்ப செலுத்த வருகின்ற 27 தேதி 3 மணிவரை கால அவகாசம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் புனரமைப்பு பணிகளை 36 மாதத்தில் முடிக்க வேண்டுமென கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பாக, கற்கள் இலவசமாக வழங்கப்படும் ஒப்பந்தப்புள்ளியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தூண்கள், சிம்ம பீடம், சிம்மம், உத்திரம், கபோதகம், கொடிவாலை, நடகசட்டம் என பழமை மாறாமல் கலைநயமிக்க வகையில் புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்கெனவே, ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு யாரும் ஒப்பந்தப் புள்ளியை எடுக்க முன்வராத நிலையில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!