மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் திறப்பு
X

பைல் படம்

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், உபகோயில்களின் உண்டியல் திறப்பில் ரொக்கமாக ரூ. 73,31,180 காணிக்கை கிடைத்தது

மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டதில் பக்தர்கள் ரூ. 73.31 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணைஆணையர் / செயல் அலுவலர் க.செல்லத்துரை, முன்னிலையில் திருக்கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல் திறப்பு 2-09-2021 இன்று நடைபெற்றது. மேற்படி , உண்டியல் திறப்பு மற்றும் எண்ணும் பணியில், மதுரை, இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மு.விஜயன், திருக்கோயிலின் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், மதுரை இந்துசமய அறநிலையத்துறை தெற்கு வடக்கு ஆய்வர்கள் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர். மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் உபகோவில்களின் உண்டியல் திறப்பில் ரொக்கமாக ரூ. 73,31,180 /- ( ரூபாய் எழுபத்தி மூன்று லட்சத்து முப்பத்தி ஒன்றாயிரத்து நூற்றி எண்பது மட்டும் ).பலமாற்று தங்கம் இனங்கள் 590 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 700, அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 22 வரப்பெற்றுள்ளன.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!