நகரை சுத்தமாக வைப்பது மக்களின் கடமையாகும்:
அரசு மேற்கொள்ளும் பணிகளை தாண்டி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது பொதுமக்களின் கடமை என்றார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
மதுரை மேலவாசல் பகுதியில் நடைபெற்ற " மாஸ் கிளீனிங்" நிகழ்வில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேலும் பேசியதாவது:
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலவாசல் பகுதியில் தொடர்ந்து தூய்மையாக நகரினை வைத்துக்கொள்கிற வகையில் நடைபெறும் மாஸ் கிளீனிங் நிகழ்வை தொடங்கி வைத்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துப்புரவு பணியாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் , கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் போன ,பணிகளை ஒன்று அல்லது இரண்டு நாட்களிலோ ஒரு வருடத்திலோ சீர் படுத்திட இயலாது . படிப்படியாக தான் இதனை சரி செய்திட முடியும்.
நீங்கள் அளித்துள்ள வாக்கிற்கு விசுவாசமாக உள்ள நான் எதிர்க்கட்சி எம்எல்ஏ -வாக இருக்கும் போது பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றி தந்துள்ளேன்.ஆளும் கட்சியாக தற்போது அதனை விட கூடுதலாக பணிகளை செய்து தருவேன். ஆனால், அரசு சார்பில் எத்தனை தடவை தூய்மை பணிகள் நடைபெற்றாலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை.குப்பைகள் காட்டுவதில் தொடங்கி,கழிவுநீர் வாய்க்காலை பராமரிப்பதில் பொதுமக்களும் தங்களின் கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
பின்னர், மேலவாசல் பகுதியில் உள்ள வாய்க்கால் தூர்வாரும் பணி,கழிவு நீர் கால்வாய் அடைப்பு நீக்கும் பணி ஆகியவற்றை தொடங்கி வைத்ததோடு குப்பைகள் அள்ளி செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் .பகுதி மக்களோடு கலந்துரையாடிய போது அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் மரு. அனீஸ் சேகர் , மாநகராட்சி ஆணையாளர் மரு. கார்த்திகேயன் ஆகியோரிடம், இப்பகுதியில் தாம் சட்டமன்ற உறுப்பினராக நிறைவேற்றிய திட்டப்பணிகள் குறித்து கூறியதோடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசினார் . இந்த நிகழ்வில், மாநகராட்சி நகர பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் குமரகுருபரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu