தடுப்பூசிகளால் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது: தமிழக நிதி அமைச்சர் பேச்சு

தடுப்பூசிகளால் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது: தமிழக நிதி அமைச்சர் பேச்சு
X
மதுரை மத்திய தொகுதியில் கோவிட்- 19. தடுப்பூசி முகாம்.

மதுரை மாவட்டத்தில் முகாம்களை அதிகப்படுத்தி தடுப்பூசி போட்டதால்தான் கொரோனா தொற்று குறைந்துள்ளது என்றார் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன்.

மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மகப்பூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 45 வயதுக்குள்பட் டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்களை புதன்கிழமை தொடங்கி வைத்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால்,கொரோனா தொற்று குறைந்துள்ளது. மதுரையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெறும். என்னதான் அரசு பல திட்டங்களை கொண்டு வந்தாலும், மக்கள் பங்களிப்பு இருந்தால் தான் வெற்றியடைய முடியும். இந்த அரசால், மக்களின் கருத்துகளுக்கு ஏற்ப திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார் அவர்.

இந்த நிகழ்வுகளில், மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் (பொறுப்பு) சையத் முஸ்தபா, நகர் நல அலுவலர் குருபரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!