மதுரை பெரியார் பஸ்நிலையத்துக்கு மீனாட்சி பெயர்: இந்து இயக்கங்கள் கோரிக்கை

மதுரை பெரியார் பஸ்நிலையத்துக்கு மீனாட்சி பெயர்: இந்து இயக்கங்கள் கோரிக்கை
X
பெரியார் பஸ்நிலையத்துக்கு மீனாட்சி பெயர் சூட்டவேண்டும்: இந்து இயக்கங்கள்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு, அன்னை மீனாட்சியின் பெயர் சூட்ட வலியுறுத்தி, மதுரை, பழங்காநத்தத்தில் வீர இந்து சேவா இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, வீர இந்து சேவா மாநில பொதுச் செயலர் காவி முத்துராஜ் தலைமை வகித்தார். ஆன்மீக பிரிவு தலைவர் மகேந்திரன் சுவாமிகள், மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகி ஜெகதீசன், கொள்கை பரப்பு இணைச் செயலர் திருச்செல்வம், இளைஞரணி தலைவர் வினோத் கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகி ஜெயபாண்டி நன்றி கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture