மறைந்த மதுரை ஆதீனம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக அமைச்சர்கள்
மதுரை ஆதீனம் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்.
மதுரை 292 வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாதர் உடல் நலக்குறைவால் நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் மதுரை ஆதீன மடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பொது மக்கள், ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இயற்கை எய்திய மதுரை ஆதீனம் அவர்களின் பூத உடலுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் மதுரை ஆதீனம் மடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த ஆதீனம் அருணகிரிநாதரின் உடல் அடக்கம் மதுரை முனிச் சாலையில் உள்ள ஆதினத்திற்கு சொந்தமான இடத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu