மதுரையில் மறைந்த ஆதீனத்துக்கு 500 கிலோவில் பளிங்கு சிலை

மதுரையில் மறைந்த ஆதீனத்துக்கு 500 கிலோவில் பளிங்கு சிலை
X

மதுரையில் மறைந்த ஆதீனத்துக்கு அமைக்கப்பட்ட பளிங்குச் சிலை

பொதுமக்கள் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மறைந்த ஆதீனத்தின் பளிங்குச் சிலை மக்களின் அஞ்சலிக்காக மடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மதுரை ஆதீனத்திற்கு 500 கிலோ எடையுள்ள பளிங்கு சிலை அமைக்கப்பட்டது

மதுரை ஆதீன மடத்தில் மறைந்த ஆதினகர்த்தர் அருணகிரிநாதரின் 500 கிலோ எடையுள்ள பளிங்கு சிலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை காலமான, மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் உடல், மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதினத்திற்கு சொந்தமாக இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பொதுமக்கள் ஏராளமானோர் மறைந்த மதுரை ஆதீனத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக மடத்திற்கு சென்று வருகின்றனர். தற்போது, மறைந்த ஆதீனத்தின் பளிங்குச் சிலை மக்களின் அஞ்சலிக்காக மடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை, ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil