மதுரை ஆதீன 293-வது மடாதிபதியாக ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்பு

மதுரை ஆதீன 293-வது மடாதிபதியாக ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்பு
X

மதுரை ஆதினத்தில் 293-வது மடாதிபதியாக பொறுப்பேற்கும் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள்.

மதுரை ஆதீனத்தில், 293-வது மடாதிபதியாக ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றார்.

மதுரை ஆதின மடத்தில் மறைந்த ஆதினகர்த்தர் அருணகிரிநாதரின் 500 கிலோ எடையுள்ள பளிங்கு சிலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன், காலமான மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் உடல் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதினத்திற்கு சொந்தமாக இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் ஏராளமானோர் மறைந்த மதுரை ஆதினத்திற்கு அஞ்சலி செலுத்தினர். தற்போது, மறைந்த ஆதினத்தின் பளிங்கு சிலை மக்களின் அஞ்சலிக்காக மடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை, ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் பார்த்து சென்றனர்.

இந்நிலையில், மதுரை ஆதினத்தில் 293-வது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!