மதுரை: கேஸ் விலை உயர்வை கண்டித்து விறகு அடுப்பில் சமைத்து போராட்டம்

மதுரை: கேஸ் விலை உயர்வை கண்டித்து விறகு அடுப்பில் சமைத்து போராட்டம்
X

எஸ்டிபிஐ கட்சி சார்பில், கேஸ் விலை உயர்வை கண்டித்து, மதுரை தினமணி தியேட்டர் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரையில், எஸ்டிபிஐ கட்சி தெற்கு மாவட்டம் சார்பாக, கேஸ் விலை உயர்வை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை தினமணி தியேட்டர் அருகே, எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பாக, கேஸ் விலை உயர்வை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் தாஜுதீன், தெற்கு மாவட்டத் தலைவர் சீமன் சிக்கந்தர், தெற்கு மாவட்ட பொது செயலாளர் முஜிபூர் ரகுமான், மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதில், திரளான பெண்கள் பங்கேற்று, விலை உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, கேஸ் அடுப்புக்கு மாற்றாக விறகு அடுப்பில் பெண்கள் சமையல் செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!