கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
X

மதுரையில் மகளை கடத்தி சென்றவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாய் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவரது 2வது மகள் நிவேதா (26). இவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் செந்தூர் என்பவர் நிவேதாவுக்கு ஆசை வார்த்தை கூறி நிவேதாவை மயக்கிய நிலையில் கடந்த 10 தினங்களுக்கு வீட்டை விட்டு பணிக்கு சென்றவர் காணவில்லை என்று கூறப்படுகிறது.தொடர்ந்து நிதி நிறுவனத்தின் உரிமையாளர் செந்தூர் தான் நிவேதாவை கடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் நிவேதாவின் குடும்பத்தார் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் லட்சுமி தனது குடும்பத்தாருடன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெயை தன்மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் மனுவை கலெக்டரிடம் வழங்க அறிவுறுத்தி பின்னர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!