/* */

கட்சியின் சின்னம் இல்லாமல் கொரானோ நிதி - அமைச்சர் பெருமிதம்.

கட்சியின் சின்னம் இல்லாமல் கொரானோ நிதி - அமைச்சர் பெருமிதம்.
X

கட்சி அடையாளம் இல்லாமல் தமிழக அரசின் அடையாளம் மட்டும் வைத்து கொரோனா நிதி வழங்கப்பட்டு வருகிறது இது நல்லாட்சிக்கு அடையாளம் என நிதி அமைச்சர் பி.டிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் தெரிவித்தார்

தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் நான்காயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அறிவித்திருந்தது. அதனடிப்படையில் முதற்கட்டமாக மதுரை மாவட்டத்தில் நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் 2000 ரூபாய் நிதி வழங்கும் நிகழ்வு மதுரை வடக்குமாசி வீதி உள்ள ரேஷன் கடையில் நடைபெற்றது.

கொரோனா நிவாரண நிதி வழங்கிய நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பின்னர் செய்தியாளரிடம் பேசும்போது தமிழக வரலாற்றில் பல சிறப்புமிக்க முதல்வர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். அந்த வகையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னதை போல சொன்னதை செய்வோம் என்ற அடிப்படையில் அதுவும் விரைவாக செய்வோம் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.

பதவியேற்று ஒரு வாரத்திற்குள் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் அந்த வகையில் இன்று 2000 ரூபாய் கொரோனா நிவாரன நிதி வழங்கப்பட்டு வருகிறது. சிலர் தெரிவித்து வருகின்றனர் பணத்தை ரேசன் கடை மூலம் கொடுப்பதற்கு பதிலாக வேறு வகையில் கொடுத்திருக்கலாம் என்று, அதில் விரைந்து கொடுக்க வேண்டும் என்றும் ஆதார் கார்டில் பல குளறுபடிகள் உள்ளது என்பதாலும பொதுமக்களுக்கு விரைந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக பணமாக கையில் கொடுக்கப்பட்டுள்ளது

நான் எதிர்கட்சி உறுப்பினராக இருந்தபொழுது தொடங்கப்பட்ட இந்த கடையில் முதல் முதலாக தொடங்கி வைக்கிறேன் தேர்தலுக்கு முன் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும் பணத்திற்கும், தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு அறிவிக்கப்பட்டு மக்கள் நலனுக்கு வழங்கக்கூடிய பணத்திற்கும் உள்ள வேறுபாடு மக்களுக்கு நன்றாக தெரியும்.

இது மக்களின் பணம் மக்களின் அனுதாபம் , பேரிடர் உள்ளிட்ட எல்லா வகையிலும் வழங்குவது என்பது தெளிவான கருத்து நியாயமான செயல் அந்த வகையில் முதலமைச்சர் முன்னுதரமாக இருக்கிறார் . கடையில் எந்த விதமான கட்சி அடையாளமோ யாரும் இல்லாமல் தமிழக அரசின் அடையாள சின்னம் மட்டும் வைத்து வழங்கப்பட்டு வருகிறது .இது தான் ஒரு நல்லாட்சிக்கு அடையாளம் என நான் கருதுகிறேன் என்றார்.

Updated On: 15 May 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...