தலைவர் முத்துமாரி தலைமையில் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக் குழு த்தலைவர் முத்துமாரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதம் நடைபெற்றது.
கவுன்சிலர் நாக பாண்டீஸ்வரி கம்பாளியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும், கவுன்சிலர் சிதம்பர பாரதி யூனியன் கூட்ட அரங்கிற்கு முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு ஆணையாளர் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
மேலும் கவுன்சிலர் தோப்பூர் முருகன் தொகுதியில் படித்த இளைஞர்கள் அதிகமாக இருப்பதால் இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார். துணைத்தலைவர் ராஜேந்திரன் திருச்சுழி தொகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாகும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்காக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொழிற்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் என்றார்.
கவுன்சிலர் திருச்செல்வம் தற்போது, கோடைகாலம் துவங்கிவிட்டதால் கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu