நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருட்டு: பலே ஆசாமி கைவரிசை

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருட்டு: பலே ஆசாமி கைவரிசை
X
மதுரையில் நடிகர் சூரி இல்ல திருமண விழாவில், மணமகள் அறையில் புகுந்து நகை திருட்டு.

மதுரையில் திருமண மண்டபத்தில், மணமகள் அறையில் புகுந்து நகை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரையை சேர்ந்தவர் நடிகர் சூரி. இவர் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

இவரது வீட்டு திருமணம் சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது, திருமணத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர், மணமகள் அறையில் புகுந்து ஒன்பதரை பவுன் நகைகளான கவர்னர் மாலை, நெக்லஸ் முதலியவைகளை திருடிச் சென்று விட்டார்.

இந்த திருட்டு தொடர்பாக, சூர்யபிரகாஷ், கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!