சிவகங்கையில் நகைக் கடன் தள்ளுபடி வழங்கும் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழை அளிக்கின்றனர், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன்.
சிவகங்கையில் நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் பங்கேற்று பொது நகைக்கடன் தள்ளுபடி 2021-கீழ் 240 பயனாளிகளுக்கு3549.50 கிராம் எடையிலான மொத்தம் ரூ.101.69 இலட்சம் மதிப்பீட்டிலான நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்கள், நகைகளை வழங்கினர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசு ரவிக்குமார், முன்னிலையில் கூட்டுறவு நிறுவனங்களின் வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ்கள் மற்றும் நகைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசியதாவது: கருணாநிதி வழியில் நல்லாட்சி நடத்திக் கொண்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் ,தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற பொருட்டு அவ்வாக்குறுதிகளில் ஒன்றான 5 பவுன் மற்றும் அதற்கு கீழ் கூட்டுறவு சங்கங்களில் இயங்கி வரும் வங்கிகளில் ஏழை எளியவர்கள் பயன்பெறுகின்ற வகையில் நகைக்கடன் தள்ளுபடி செய்ததற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு அதன்படி தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் நகைகளை உரியவர்களிடமே வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு பலன்கிடைக்கின்ற வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது. இப்பணியினை கடந்த 5 காலமாக கூட்டுறவுத்துறைச் சார்ந்த அலுவலர்கள் கொண்டு முறையாக கணக்கீடப்பட்டு இதற்கென குழு அமைத்து சிறப்பான பணியினை மேற்கொண்டனர். அதன்படி உண்மையான பலன் யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ,பயிர்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் தள்ளுபடியினை பெற்றவர்கள் நகைக்கடன் தள்ளுபடி பெற இயலாது. தகுதியான பயனாளிகளாக இருந்தால் அதற்குரிய பலன் உடனடியாக வழங்கப்படும். கடந்த 4 நாட்களில் சுமார் 4ஆயிரம் கோடி வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கை. இராமநாதபுரம், மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் பயிர்க்கடன் பெறுவதற்கு கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் கடந்தாண்டு ரூ.80 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது, நடப்பாண்டில் கூடுதலாக ரூ.40 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு மொத்தம் ரூ.123 கோடி மதிப்பீட்டில் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சுயஉதவிக்குழு உறுப்பினர் ஆகியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆகியோர்களுக்கு கடன்உதவி வழங்கிடவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏழை, எளிய மக்களின் நலன்காக்கின்ற அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகின்றன.
மேலும், தமிழகத்தில் உள்ள 6336 கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு உட்பட்டு கடன் பெற்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்துள்ள நகைக்கடன் தாரர்களில் சிறப்பு தணிக்கை முடிவுற்று 11,60,384 நபர்களுக்கு ரூ.5053 கோடி அளவிற்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்களும் நகைகளும் தமிழக முதல்வரின் ஆணையின்படி நாளது தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ,213 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.அதில் ,சிவகங்கை மாவட்டத்தில் 166 கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு உட்பட்டு கடன்பெற்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்துள்ள நகைக்கடன்தாரர்களில் சிறப்பு தணிக்கை முடிவுற்று 23,553 கடன்தாரர்களுக்கு ரூ93.05 கோடி அளவிற்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்களும், வழங்கும் அடிப்படையில், காரைக்குடி சரகத்திற்குட்பட்ட 240 பயனாளிகளுக்கு 3549.50 கிராம் எடையிலான ரூ.101.69 இலட்சம் மதிப்புடைய நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்களும் அதற்கான நகைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஏழை, எளிய மக்களின் தேவைகள் அறிந்து திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றார் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.
பின்னர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், கலைஞர் வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும்தமிழ்நாடு முதலமைச்சர் குக்கிராமம் முதல் பெருநகரங்கள் வரை அனைத்துப்பகுதிகளிலும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.தேர்தல் வாக்குறுதிகளை 90 சதவிகிதம் நிறைவேற்றியும் உள்ளார்கள்.
மேலும்,தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான கூட்டுறவு சங்கங்களில் மூலம் நகைக்கடன் பெற்றவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும் இப்பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 23,553 கடன்தாரர்களுக்கு ரூ.93.05 கோடி மதிப்பீட்டிலான நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் மற்றும் அதற்கான நகைகள் வழங்கும் அடிப்டையில் இன்றைய தினம் கூட்டுறவுத்துறை அமைச்சர் காரைக்குடி சரகத்திற்குபட்ட 240 பயனாளிகளுக்கு 3549.50 கிராம் எடையிலான ரூ.101.69 இலட்சம் மதிப்புடைய நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் மற்றும் நகைகளை வழங்கவுள்ளார்கள்.
நகைக்கடன் தள்ளுபடி திட்டம் என்பது கடந்த காலங்களில் , கலைஞர் அவர்கள் கொண்டு வந்த திட்டமாகும். அதன்படி , தமிழ்நாடு முதலமைச்சர் பொது மக்களின் தேவைகளை அறிந்து புதிதாகவும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார் என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜீனு, திருப்பத்தூர் பேரூராட்சித்தலைவர் கோகிலாராணி, பேரூராட்சி துணைத்தலைவர்கான்முகமது, பேரூராட்சி வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் எஸ்.சரவணன் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பிரதிநிதிகள், பயனாளிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu