மதுரையில் இடி-மின்னலுடன் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மதுரையில் இடி-மின்னலுடன் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X
மதுரை மாவட்டத்தில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் இடி - மின்னலுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாட்டை பொறுத்தவரை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் இடி - மின்னலுடன் கனமழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. மாட்டுத்தாவணி, அண்ணாநகர், வண்டியூர், சிம்மக்கல், காமராஜர் சாலை, பெரியார் பேருந்து நிலையம், புதூர், திருப்பாலை, பழங்காநத்தம், பொன்மேனி, காளவாசல், பசுமலை, சோழவந்தான், ஓத்தக்கடை, கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளில் இடி -மின்னலுடன் கன மழை பெய்தது.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்க வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அலுவலகம் முடிந்து வீடு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகினர். நகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதேபோன்று, புறநகர் பகுதிகளான சிலைமான், கருப்பாயூரணி, சக்கிமங்கலம், அழகர்கோவில் சத்திரப்பட்டி, அவனியாபுரம் விமான நிலையம் திருநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil