மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஜவுளிக் கடையில் தீ - பரபரப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஜவுளிக் கடையில் தீ - பரபரப்பு
X
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஜவுளிக் கடையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள விளக்குத்தூண் பகுதியில், ராஜஸ்தானைச் சேர்ந்த குமான் சிங் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மூன்றடுக்கு தளம் கொண்ட துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர், இரவு வழக்கம் போல பணிகளை முடித்துவிட்டு கடையை அடைத்து சென்றார்.

இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் கடையின் உள்ளே இருந்து புகை வந்துள்ளது. தீடீரென துணிக்டையின் கீழ் தளத்தில் தீ எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர், விளக்குத்தூண் காவல் துறையினருக்கு தகவக் அளித்தனர். காவல்துறையினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, பெரியார்நிலையம், மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 2 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 பேர், 1 மணி நேர போரட்டத்திற்கு பின்பு, துணிக்கடையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஜவுளிப்பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது, காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிது. இச்சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil