மதுரை நகரில் சாலைப் பணிகளை தொடங்கி வைத்த நிதியமைச்சர்

மதுரை நகரில் சாலைப் பணிகளை தொடங்கி வைத்த நிதியமைச்சர்
X

மதுரையில் சாலைப் பணிகளை தொடங்கி வைத்த நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன்

மதுரையில் ரூ.23.68 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டன

மதுரையில் ரூ.23.68 கோடி மதிப்பீட்டில்; சாலை பணிகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 எல்லீஸ் நகர், ஆரப்பாளையம் மற்றும் மண்டலம் 4 தமிழ்ச்சங்கம் ரோடு, சுந்தரராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைப்பதற்கான பணியினை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மதுரை மாநகராட்சி மண்டலம் 1க்கு உட்பட்ட பகுதிகளான ஆரப்பாளையம், தத்தனேரி, பொன்னகரம், ரயில்வே காலனி, எல்லீஸ் நகர், எஸ்.எஸ்.காலனி ஆகிய பகுதிகளுக்கும், மண்டலம் 4க்கு உட்பட்ட பகுதிகளான சுந்தரராஜபுரம், பெருமாள் தெப்பக்குளம், கிருஷ்ணராயர் தெப்பக்குளம், தமிழ்ச்சங்கம் ரோடு, சொக்கநாதர் கோவில், வடக்கு கிருஷ்ணன் கோவில், சுப்பிரமணியபுரம், காஜிமார் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்து சாலைகள் சேதமடைந்ததாலும், இயற்கை இடர்பாடுகள் மற்றும் மழைக் காலங்களில் பல்வேறு சாலைகளில் சேதமடைந்து இருப்பதாலும், அந்த சாலைகளை மேம்படுத்த மூலதன மானிய நிதி 2021-22 ஆண்டு மற்றும் 2021-22 ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ்

மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட சாலைகளை மேம்படுத்துவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதன்படி ,ரூ.23.68 கோடி மதிப்பீட்டில் 148 தார் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் இரண்டு மாத காலத்தில் நிறைவடையும்.

அதன்படி, மண்டலம் 1 வார்டு எண்.17 எல்லீஸ் நகர் பகுதிகள் மற்றும் மண்டலம் 4 வார்டு எண்.81 தமிழ்ச்சங்கம் சாலை (சிம்மக்கல்) பகுதிகளில் சாலை அமைக்கும் பணியினை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன், நகரப்பொறியாளர் (பொ)அரசு, உதவி ஆணையாளர் தெட்சிணாமூர்த்தி, சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் ரவிச்சந்திரன், மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன்,விஜயகுமார், உதவிப்பொறியாளர் அய்யப்பன், உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு