மதுரை நகரில் இன்று( ஜூலை 29)குடிநீா் விநியோகம் நிறுத்தம்:மாநகராட்சி அறிவிப்பு
குடிநீா் விநியோகம் நிறுத்தம்
மதுரை நகரில் வைகை குடிநீா் திட்டப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (ஜூலை 29) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முதலாம் வைகை குடிநீா் திட்டப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, வைகை அணையிலிருந்து குடிநீா் கொண்டுவரப்படும் முதலாம் வைகை குடிநீா் திட்டத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் குழாய்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக, கீழமாரட் தெரு அருகிலுள்ள மேல்நிலைத் தொட்டி பழைய குழாய்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிய இரும்புக் குழாய்கள், புதிய வால்வுகளை பொருத்தி குழாய்களை இணைக்கும் பணிகள் இன்று வியாழக்கிழமை நடைபெற உள்ளன.
இதனால், மாநகராட்சி வார்டுகள் 10, 11, 12, 13, 14, 15- க்குள்பட்ட ஆரப்பாளையம் மேல்நிலைத் தொட்டி பகுதி 1, ஆரப்பாளையம், பிள்ளைமார் தெரு, கோமஸ்பாளையம், ஹார்வி நகா், ஏ.ஏ.சாலை, டி.டி.சாலை, கண்மாய்க்கரை, முனிசிபாளையம், புது ஜெயில் சாலை, மேலப்பொன்னகரம், மோதிலால் தெரு, கரிமேடு, ஆரப்பாளையம் கிராஸ் சாலை, பொன்னகரம் பகுதிகள்.
வார்டு 16, 17, 18-க்குள்பட்ட ஆரப்பாளையம் மேல்நிலைத் தொட்டி, எல்லீஸ் நகா், எஸ்.எஸ்.காலனி, மகபூப்பாளையம் மற்றும் அன்சாரி நகா் பகுதிகள்.
வார்டு 50, 51, 73-க்குள்பட்ட கீழமாரட் 1-ஆவது பகிர்மானம், தாசில்தார் பள்ளிவாசல் தெரு, ஆட்டுமந்தை பொட்டல், கீழமாரட் வீதி, கரீம் பள்ளிவாசல், சுங்கம் பள்ளிவாசல், காயிதே மில்லத் தெரு, இஸ்மாயில்புரம், அருணாசலபுரம், கீழவெளிவீதி, லட்சுமிபுரம் கான்பாளையம் மற்றும் குறுக்குத் தெருக்கள்.
வார்டு 75-இன் பகுதி, 100-இன் பகுதிகளான பழங்காநத்தம் மேல்நிலைத் தொட்டி, பழங்காநத்தம், வசந்த நகா் 4-ஆவது தெரு, திருவள்ளுவா் நகா், அக்ரஹாரம், தண்டைக்காரன்பேட்டை.
வார்டு 75-இன் பகுதி, 76-இன் பகுதிகளான பழங்காநத்தம் மேல்நிலைத் தொட்டி 2-ஆவது பகிா்மானம், பசும்பொன் நகா், கீழத்தெரு, மருதுபாண்டியா் தெரு, பழங்காநத்தம், நேரு நகா், மாடக்குளம், வி.கே.பி. நகா், வடக்குத் தெரு.
வார்டு 76-க்குள்பட்ட அரசரடி மேல்நிலைத் தொட்டி, துரைச்சாமி நகா், வேல்முருகன் நகா். வார்டு 65, 66-க்குள்பட்ட ஜான்சிராணி மேல்நிலைத் தொட்டி 1 முதல் பகிர்மானம், தெற்குமாசி வீதி, பெருமாள் மேஸ்திரி வீதி, காமாட்சி அம்மன் கோயில் தெரு, முத்தையாபிள்ளை தெரு, ஜடாமுனி கோயில் தெரு, மகால், சின்னக்கடைத் தெரு, பந்தடி தெரு, கான்சாமேட்டுத் தெரு, தெற்கு ஆவணி மூல வீதி, ஓதுவார் தெரு, வெங்கலக்கடைத் தெரு, சப்பாணி கோயில் தெரு, கான்சா மேட்டுத் தெரு பகுதிகள்.
வார்டு 66 பகுதி, 67, 74, 85- க்குள்பட்ட ஜான்சிராணி மேல்நிலைத் தொட்டி 2-ஆவது பகிர்மானம், தென்னை ஓலக்காரத் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு மாரட் வீதி, தெற்குவெளி வீதி, நாடார் வித்யாசாலை, மீன்கடை, எப்.எப். சாலை, மகால் மற்றும் பந்தடி தெருக்கள்.
வார்டு 76- க்குள்பட்ட அரசரடி மேல்நிலைத் தொட்டி, சத்தியமூா்த்தி நகா் 1 முதல் 3 தெருக்கள் மற்றும் குறுக்குத் தெருக்கள்.
வார்டு 67 பகுதி, 68, 69, 71 பகுதி, 72 பகுதி, 74 பகுதிகளான ஜோசப் பார்க் மேல்நிலைத் தொட்டி 2, சிந்தாமணி சாலை, நாகுப்பிள்ளைத் தோப்பு பகுதிகள், வாழைத்தோப்பு பகுதிகள், கிருஷ்ணாபுரம் 1, 2 தெருக்கள், பச்சரிசிக்காரத் தெருக்கள், பாலுச்சாமி ஐயா் தெரு, புதிய மாகாளிப்பட்டி சாலை மற்றும் குறுக்குத் தெருக்கள், ராமசத்திரம் குறுக்கு தெருக்கள்.
வார்டு 52, 53, 54, 57, 70, 71 பகுதி, 72 பகுதி, 69, 70, 71-க்குள்பட்டஜோசப் பார்க் மேல்நிலைத் தொட்டி 1 மற்றும் சன்னியாசி ஊருணி மேல்நிலைத் தொட்டி பகுதிகள், காமராஜா்புரம் பகுதிகள், பாலரெங்காபுரம் மற்றும் சின்னக்கண்மாய் பகுதிகள், பங்கஜம் காலனி, புது ராமநாதபுரம் சாலை, தெப்பக்குளம் பகுதிகள், தமிழன் தெரு, மீனாட்சி நகா் பகுதிகள், அனுப்பானடி பகுதிகள் முழுவதும், நரசிம்மாபுரம், நவரத்தினபுரம் பகுதிகள், சீனிவாசன் பெருமாள் கோயில் தெரு, ரசாயனப் பட்டறை, கீழச்சந்தைப்பேட்டை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.
பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், மேலும் அத்தியாவசியமான வார்டுகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றும், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu