பரவை பேரூராட்சி தலைவர் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி திமுகவினர் போராட்டம்

பரவை பேரூராட்சி தலைவர் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி திமுகவினர் போராட்டம்
X

பேருராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் திமுகவினர்.

மதுரை அருகே பரவையில், பேரூராட்சி தலைவர் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை, பரவை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது அதிமுகவினர் 2 பேர் வாக்களித்த நிலையில், திடீரென திமுகவினர் ரகளையில் ஈடுபட்டு வாக்குபெட்டியை கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் அன்புச்செல்வன், துரை சரவணன் ஆகிய இருவரும் அதிமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக கூறி வெளிநடப்பு செய்தனர். பின்னர் பரவை பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுகவினரை அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடி முருகு, திமுகவினரிடம் தேர்தல் விதிமுறைகளை கூறியும், திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பேருராட்சி அலுவலகத்தை திமுகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்