மதுரை மாநகராட்சி: பழுதான வாகனங்களில் குடிநீர் வினியோகம்..! விபத்தை உண்டாக்கும் அபாயம்

மதுரை மாநகராட்சி: பழுதான வாகனங்களில் குடிநீர் வினியோகம்..!  விபத்தை உண்டாக்கும் அபாயம்
X
பழுதான வாகனங்களில் குடிநீர் வினியோகம் உயிர்ப்பலி ஆகும் முன் வாகனத் தணிக்கை செய்வார்களா மாநகராட்சி நிர்வாகம்

மதுரை மாநகராட்சிக்கு 100 வார்டுகள் உள்ளன இதில் பல வார்டுகளுக்கு மாநகராட்சி தனியா ஒப்பந்தம் வாகனம் மூலமாகவே குடிநீர் சப்ளை செய்து வருகிறார்கள்.

இதில், லாரி வேன்கள் மற்றும் டிராக்டர் மூலம் குடிநீர் சப்ளை செய்து வருகிறது இதில் பல வாகனங்கள் பழுதடைந்து முறையான பராமரிப்பு இல்லாமலும் இருக்கின்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதற்கு எடுத்துக்காட்டாக மதுரை பைபாஸ் சாலையில் குடிநீர் ஏற்றிச்சென்ற மாநகராட்சி ஒப்பந்த டிராக்டர் ஒன்று அரசரடி குடிநீர் ஏற்றும் நிலையத்திலிருந்து குடிநீரை ஏற்றிக்கொண்டு பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.

அந்த டிராக்டர் ஆனது சாலை முழுவதும் குடிநீரை சிந்திக் கொண்டு பின்புறம் டயர்களும் குதித்து குதித்து வாகனம் பவுலும் அளவிற்கு சென்றது. மேலும் வாகனம் விபத்தில் சிக்கி யாரேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் மாநகராட்சி பொறுப்பேற்குமா. இதனால், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் வாகனங்கள் அனைத்தையும் தணிக்கை செய்து வாகன முறையாக பராமரிப்பு செயல்படுகிறதா குடிநீர் மற்றும் அன்றி ஒப்பந்த அடிப்படையில் குப்பைகளை ஏற்றி செல்லும் வாகனங்களையும் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனத்தையும் தணிக்கை செய்ய வேண்டும் என்பது பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா? எதிர்பார்ப்புடன் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!