மதுரை வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் அழகர்மலையை வந்தடைந்தார்
மதுரை வைகை ஆற்றில் இறங்கிய அழகர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து, ராமராயர் மண்டபடியில், தசவதார நிகழ்ச்சியும், மைசூர் ராஜா மண்டபடியில் பூப்பல்லாக்கும் நிகழ்ச்சியில், பங்கேற்று விட்டு, பல்வேறு அலங்காரங் களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத்தொடர்ந்து, கள்ளழகர் பூப்பல்லாக்கில் அலங்காரமாகி, மதுரை தல்லா குளத்திலிருந்து புறப்பட்டு, மதுரை தல்லாகுளம், புதூர், சூர்யா நகர், மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி ஆலத்திற்கு பங்கேற்று விட்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 10 மணி அளவில் அழகர் மலை வந்தடைந்தார்.
அங்கு அதிர்வெட்டுகள் முழங்க கள்ளழக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கள்ளழகர் சித்திரை திருவிழா முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அழகர் மதுரைக்கு வந்ததிலிருந்து, அழகர் மலையை சென்றடையும் வரை தொடர்ந்து மழைபெய்து கொண்டிருந்தது. ஆங்காங்கே, அழகர் வருவதை ஒட்டி, பிரசாதங்கள், நீர்மோர், பானகம் ஆகியவை மக்களுக்கு வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu