மதுரையில் தேடிச் சென்று உணவு வழங்கும் சிறப்பு காவல் படை போலீஸார்
மதுரையில் தேடிச் சென்று உணவு வழங்கும் சிறப்பு காவல் படை போலீஸார்.
மதுரையில் பசித்திருப்போருக்குதேடி சென்று உணவு பொட்டலங்களை வினியோகித்து வரும் சிறப்பு காவல் படையினர்:
கொரோனா பெருந்தொற்றால் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் மதுரையில் சாலையோர வாசிகளுக்கும் பொதுமக்களுக்கும் மதுரை தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஆறாவது அணியின் சார்பில் கடந்த 10 நாட்களாக தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் என விதவிதமான உணவு பொட்டலங்களை தயார் செய்து உணவு வழங்கி சேவையாற்றி வருகின்றனர்.
மதுரை தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஆறாவது அணியின் காவல்துறை கண்காணிப்பாளர் இளங்கோ தலைமையில், சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவலர்கள் தொடர்ந்து 10 நாட்களாக தினந்தோறும் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு சாதம் தயார் செய்து, மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் பழங்காநத்தம் ஆரப்பாளையம் பெரியார் பேருந்து நிலையம் மதுரை மாட்டுத்தாவணி என அனைத்து பகுதிகளுக்கும் சென்று சாலையோரங்களில் அமர்ந்திருக்கும் நபர்களை தேடி சென்று தினந்தோறும் விநியோகம் செய்து வருகின்றனர்.
ஊரடங்கும் பசியால் யாரும் காத்து இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு அமைப்பினர் உணவுகளை வழங்கி வரக்கூடிய சூழலில் காவல்துறையினர் பசித்து இருப்போரை தேடி சென்று உணவளித்து வருவது மதுரை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu