மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
X

மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் நலத்திட்ட உதவி வழங்கினார்.

மதுரை மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று உடனடி தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா வேண்டுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகை போன்ற உதவித்தொகை வேண்டுதல் என, மொத்தம் 485 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா அறுவுறுத்தினார்.

மேலும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக சிறப்பாக பணியாற்றிய நியாய விலைக்கடை விற்பனையாளர்கள், எடையாளர்கள் என நான்கு பேருக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். அதேபோல, மதுரை தெற்கு வட்டம், காமராஜர் சாலை பகுதியைச் சார்ந்த செல்வி தனுஷ்கா என்ற 7-ம் வகுப்பு மாணவி தனது சிறுசேமிப்பு தொகை ரூபாய்.7999- யை ராணுவ வீரர்களின் நலனிற்காக பயன்படுத்த வேண்டி வங்கி வரைவோலையாக மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். சிறுமியின் நற்செயலை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் , சிறுமிக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் , உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்ஷு நிகம், உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அமித்ஷாவின் உருவ பொம்மை எரிக்க முற்பட்ட விடுதலை சிறுத்தைகள் – போலீசாரின் தடை!