உசிலம்பட்டி அருகே பா.ஜ.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்..!

உசிலம்பட்டி அருகே பா.ஜ.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்..!
X

பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் பேட்டி அளித்தார்.

ஜெகன் மோகன் அரசு இந்துக்களுக்கு எதிராக எவ்வளவு வன்மத்தை வைத்து ஆட்சி செய்துள்ளது என, திருப்பதி லட்டில் மாட்டின் கொளுப்பு கலத்த விவகாரம் இருக்கிறது - விஜய் லெட்டர் பேடு மூலமாகவும், ட்விட்டர் மூலம் மட்டுமே கட்சி நடத்தி வருகிறார். மாநாடு நடத்தி முடிக்கட்டும்.

அவர் பேசும் போது திமுகவின் பி டீமா இல்லையா என தெரியவரும் - என, உசிலம்பட்டியில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் பேட்டி அளித்தார்.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில், பாஜக தமிழ்நாடு மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம், மதுரை பெருங்கோட்ட பொருப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மதுரை மாவட்ட தலைவர் சசிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து அதிக உறுப்பினர்களை சேர்த்த மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பிரகாஷ்-யை பாராட்டினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம்.

இன்று வரை 4 கோடி உறுப்பினர்கள் பாஜகவில் இணைத்து கொண்டுள்ளனர். தமிழகத்திலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பாஜகவில் இணைந்து வருகின்றனர். ஏனென்றால், 2026 தேர்தலில் தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியல் கட்சி தேவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்., கிராம புற பகுதிகளில் பாஜகவிற்கு மிக பெரிய அங்கீகாரத்தை கொடுத்து இணைந்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்துள்ளது. என்பதே மிக பெரிய வெற்றியாக பார்க்க வேண்டும். இதற்கு முன்பு தேர்தல் நடந்தாலே குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு என ரத்தம் சிந்தாமல் தேர்தல் நடைபெறாது. ஆனால், ஆர்டிக்கல் 320 க்கு பின் நடந்துள்ள முதல் தேர்தல் அதிகப்படியான மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்த தேர்தல் என பார்க்க வேண்டும்., பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பேட்டி கொடுக்கும் போது, பழைய நிலைக்கு கொண்டு செல்ல காரணமாக பாஜக இருப்பது போல பேசிக் கொண்டு வருகிறார்கள்.

பாகிஸ்தானின் அங்கமாக காங்கிரஸ்-ம், என்சிபி கட்சியும் இணைந்து செயல்பட்டது மக்களுக்கு தெளிவாக தெரிந்துள்ளது. விஜய் ஒரு லெட்டர் பேடு கட்சி நடத்துகிறாரா என்ற கேள்வி எழுகிறது., ஏற்கனவே, திமுக சிறுபான்மை மக்களுக்காக செயல்பட்டு வருகிறது.

அதே பாணியில் அதையே பின்பற்றி லெட்டர் பேடில் கூட குங்குமம் வைத்திருக்கும் விஜய்-ன் புகைப்படம் எடுக்கப்பட்டு குங்குமம் இல்லாத புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இந்து என்கின்ற அடையாளம் எதுமே இல்லாமல் இருக்க வேண்டும் என, நினைக்கிறாரோ என்கின்ற எண்ணம் தோன்றுகிறது.

நம்பிக்கையின் மீது கொள்கையின் மீது பின் வாங்கிக் கொண்டு அரசியல் செய்யும் நிலை இருக்க கூடாது. அந்த நிலையில் விஜய் இருந்து வருகிறார். அவரது நம்பிக்கையில் கூட நேர்மையாக இல்லாத ஒருவர் எப்படி நேர்மையான அரசியல் செய்யமுடியும்?என்ற கேள்வி எழுகிறது.

இது வரை கட்சிக்கு என்ன கொள்கை, எதை வைத்து கட்சி நடத்துகிறார் என, தெரியவில்லை, லெட்டர் பேடு மூலமாகவும், ட்விட்டர் மூலம் மட்டுமே கட்சி நடத்தி வருகிறார். டுவிட்டர், லெட்டர் பேடு-ல் மட்டும் கடந்த 6 மாதமாக இருந்து கொண்டு வருகிறது. மாநாடு நடக்கட்டும் அதில் என்ன பேசுகிறார் என, பார்க்கலாம். அவர் திமுகவின் பி டீமா இல்லையா என்பது தெரிய வரும்.

இந்துக்களின் மனதை மிகவும் புன்படுத்தும் வகையில் திருப்பதி லட்டில் மாட்டின் கொழுப்பு கலந்த செயல் நடந்துள்ளது, மிக அதிர்ச்சியை கொடுக்கிறது.

கோடிக்கணக்கான இந்து மக்கள் நம்பக்கூடிய திருப்பதிக்கு சென்று எல்லோரும் ஆவலோடு எடுத்து உண்ணக்கூடிய விசயம், உலகில் உள்ள கோவில்களிலேயே அதிக வருமானம் தரக்கூடிய கோவில் திருப்பதி, அதில் நெய் வாங்கும் போது இது போன்ற கலப்படம் நடந்துள்ளது. இதற்கு முன் ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் அரசாங்கம் இந்துக்களுக்கு எதிராக நடத்திய வன்மம் கலந்த ஆட்சி என தெரிய வருகிறது.

திருமாவளவன் மது ஆலைகள் வைத்துள்ள இரு கட்சிகளுமே, மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். ஆலைகளின் முதலாளிகள் எல்லாம் இந்த இரு கட்சிகளில் தான் இருக்கறார்கள். அவர்களை கூப்பிட்டு இந்த மாநாடு நடத்தும் போது இந்த மாநாட்டின் நோக்கம் என்ன, மக்களை ஏமாற்றுவதற்கு இந்த மாநாடு என்பது தெளிவாக தெரிகிறது.

உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்து மது ஒழிப்பு தான் என் கொள்கை என்றால் மது காய்ச்சும் ஆலை வாசல் முன்பு தர்ணா உக்காருங்க, ஆர்ப்பாட்டம் பன்னுங்க, சாகும் வரை உண்ணாவிரதம் என அறிவிப்பு செய்யுங்கள் மக்கள் மீது அக்கறை உள்ள தலைவர் என ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால், அக்டோபர் 2 ஆம் தேதி ஒரு புனிதமான நாளில் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார் என்றால் வேற நாட்களில் நடத்தி இருந்தால் இவரது கட்சிக்காரர்கள் தான் டாஸ்மாக்-ல் நின்றிருப்பார்கள், அதை பிடித்து மீடியாவில் போட்டு விடுவார்கள் என பயந்து அக்டோபர் 2 ஆம் தேதி வைத்துள்ளார். வேற நல்ல எண்ணம் எல்லாம் கிடையாது.

இது ஒரு அரசியல் நாடகம் என்றே பார்க்க வேண்டுமே தவிர இதில் எந்த நல்ல எண்ணமும் இருப்பதாக தெரியவில்லை என பேசினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!