மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
X

புது டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைநகர் புது டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதனால் பரபரப்பு நிலவி வரும் நிலையில் அதன் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மோப்பநாய் பிரிவு, துப்பாக்கி ஏந்திய போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு, தமிழக போலீசார் 2 அடுக்கு பாதுகாப்பு என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகிறது. இதேபோல பயணிகளும் , அவர்களது உடமைகளும் பலத்த சோதனைக்கு பின்பே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!