திமுக தேர்தல்அறிக்கையை நிறைவேற்றியதில்லை- செல்லூர்ராஜூ

திமுக தேர்தல்அறிக்கையை நிறைவேற்றியதில்லை- செல்லூர்ராஜூ
X

தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றியதாக திமுகவிற்கு வரலாறு கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சட்டமன்ற தேர்தலுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இக்கூட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தனியார் மஹால் ஒன்றில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், ஆண்டுக்கு 6 சிலிண்டர் திட்டமும், இல்லத்தரசிகளுக்கு 1500 ரூபாய் திட்டமும் போதும் நாம் ஆட்சிக்கு வந்து விடுவோம். என்னைப்பற்றி பல மீம்ஸ்கள் எல்லாம் போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என பேசினார்.

மேலும் திமுக அறிவித்துள்ள திட்டங்கள் எதையும் நிறைவேற்றியதாக வரலாறு கிடையாது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், நிறைவேற்ற முடியாத திட்டங்களை சொன்னார்கள். எனவே, திமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!