ஸ்டாலின் அறிக்கை மட்டுமே வெளியிடுவார்- ஆர்.பி. உதயகுமார்

ஸ்டாலின் அறிக்கை மட்டுமே வெளியிடுவார்- ஆர்.பி. உதயகுமார்
X

ஸ்டாலினால் அறிக்கை மட்டுமே வெளியிட முடியும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசாணையை வெளியிடுவார் என அமைச்சர் ஆர்பி. உதயகுமார் திருமங்கலத்தில் கூறினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மறவன்குளம் கிராமத்தில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். முன்னதாக இக்கிராமத்தில் உள்ள வரதவேங்கடராஜப்பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திறந்த வெளி வாகனத்தில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய ஆர்.பி.உதயகுமார் ஒரே ஆண்டில் இரண்டு முறை விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்தது அதிமுக அரசு மட்டுமே. 5 ஆண்டுகளாக திருமங்கலம் தொகுதி மக்களை சுற்றி சுற்றி வந்துள்ளேன்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் பொதுமக்களை பாதுகாக்கும், மகழ்ச்சியூட்டும் பல திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும். திருமங்கலம் தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்றால் தொகுதி முழுவதும் வீட்டுமனை இல்லாத குடும்பம் இல்லை என்ற நிலையை மாற்ற தனது சொந்த முயற்சியில் அம்மா வீட்டுமனை திட்டத்தை செயல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனோ காலத்தில் மக்களை சந்திக்கவில்லை. ஆறுதல் தெரிவிக்க கூட எதிர்கட்சியினர் பொதுமக்கள் சந்திக்கவில்லை. ஸ்டாலினால் அறிக்கை மட்டுமே வெளியிட முடியும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசாணையை வெளியிடுவார். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!