ஸ்டாலின் க்ளீன் போல்ட் ஆகி விடுவார் -செல்லூர் ராஜூ

ஸ்டாலின்  க்ளீன் போல்ட் ஆகி விடுவார் -செல்லூர் ராஜூ
X

தமிழக முதல்வரின் அறிவிப்புகளால் ஸ்டாலின் க்ளீன் போல்ட் ஆகி விடுவார் என மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜூ பேட்டியின் போது கூறினார்.

மதுரை விளாங்குடி மற்றும் பொன்மேனி ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ இன்று திறந்து வைத்தார். இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர், பின்னர் அமைச்சர் செல்லூர்ராஜூ செய்தியாளர்களிடம் கூறும் போது,கொரோனா சூழலில் வேலைநிறுத்தம் என்பது வரவேற்க வேண்டியதில்லை. கொரோனா சூழலில் மாணவ மாணவிகள் படிக்க காலம் போதவில்லை. தேர்வு என்பது எட்டாக்கனியாக இருந்தது. மாணவர் சஞ்சலத்தை போக்கும் வகையில் ஆல்பாஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, இந்தியா கிரிக்கெட் எப்படியோ அது போல தற்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எப்படி பால் போடுவது என்றே தெரியவில்லை. தமிழக முதல்வரின் அறிவிப்புகளால் ஸ்டாலின் க்ளீன் போல்ட் ஆகி விடுவார். வரும் தேர்தலில் அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டுமென பொதுமக்கள் முடிவு செய்து விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!