மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட தயார்: குஷ்பு

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட தயார்: குஷ்பு
X

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட தயார் என பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு பேட்டியின் போது கூறினார்.

மதுரை தெப்பகுளம் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல்விழாவில் கலந்து கொண்ட பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது : பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது பாஜக எங்கே இருக்கிறது என கேட்ட நிலையில் தற்போது ஒவ்வொரு தெருக்களிலும் பாஜக உள்ளது, சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட தயார் எனவும், கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதி பெண்கள் குறித்து இழிவாக பேசியது கேவலமானது என்றார்.

அதிமுக பொதுக்குழுவில் அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தில் அப்படி வந்தால் பின்னர் அது குறித்து பேசலாம் எனவும் திருமாவளவன் பிரபலத்திற்காக எதாவது சர்ச்சையாக பேசி வருகிறார் எனவும் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!