அந்தமான் கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

அந்தமான் கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
X

வானிலை ஆய்வு மைய படம்.

அந்தமான் கடற்பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உறுவாகியுள்ளது.

தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் தாய்லாந்து கடற்கரையில் இன்று காலை 8.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இந்த தாழ்வு பகுதி மேற்கு - வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் ஒட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுநாள் (15ம் தேதி) நிலைகொள்ள வாய்ப்புள்ளது.

அது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திர கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!