மொபைல் போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்...

மொபைல் போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்...
X
உங்களுடைய மொபைல் போன் தொலைந்துபோனால் கண்டுபிடிக்க என்ன செய்வது என்பதை பார்ப்போம்.

இந்த உலகில் மக்களிடையே மொபைல் போன் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. தற்போது மொபைல் போன் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை. உதாரணமாக வங்கி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் சேவைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் மொபைல் போன் மூலமாகத்தான் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

இதுதவிர பொழுதுபோக்கு சம்பந்தமான இசை மற்றும் மொபைல் செயலி விளையாட்டுகளும் இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் இளைஞர்கள் பெரும்பாலானோர் விலை உயர்ந்த செல்போன்களை வாங்கி தன்னுடைய சொத்துக்களில் ஒன்றாக பாதுகாத்து வைத்து வருகின்றனர். இதுவும் அவர்களின் பேஷன் உலகமாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொழில்நுட்பம் வளர வளர க்ரைம்களும் தற்போது அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. அவ்வாறு விலை உயர்ந்த செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வதும் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது.

இதனை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

  • உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும் (INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டறியலாம்.
  • இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது. உங்களின் கைப்பேசியை எடுத்து அதில் உள்ள SIMஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள்..
  • GUARDIAN என்ற பென்பொருளை உங்களின் மொபைலில் பதிவிறக்கம் செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .
  • நீங்கள் நினைக்கலாம் அந்த மென்பொருளை UNINSTALL செய்தால் அதன் பயன்பாடு முடக்கப்படலாம் என்று.
  • ஆனால் அதில் கடவுச்சொல் (password) பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம்.
  • அவர் உங்களின் சிம் - ஐ எடுத்து விட்டு அவரோட சிம் - ஐ போடும்போது அவரின் தொடர்பு எண் உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு குறுஞ்செய்தியாக வரும்.
  • எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் அவரின் கைப்பேசி எண் உங்களுக்கு குறுந்தகவலாக வந்துக்கொண்டே இருக்கும் .

Tags

Next Story
Weight Loss Tips In Tamil