முழு ஊரடங்கால் இன்றும் சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்

முழு ஊரடங்கால்  இன்றும்  சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்
X

ஊரடங்கு மாதிரி படம் 

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து 1500 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் 1500 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல் படுத்தியிருந்தது. ஆனாலும் கொரோனா பரவலின் வேகம் குறையவில்லை. அதனால், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்வதற்கு அவசர கூட்டம் ஒன்றை கூட்டினார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களுடன், முதலமைச்சர் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் படி முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி நாளை அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி , மருந்து கடைகள், நாட்டு மருந்து கடைகள், பால், மற்றும் பார்ஸல் சேவைக்கு மட்டும் உணவகங்கள் திறந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் காலை 6 முதல் 10 வரை காலை உணவுக்கும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், இரவு உணவுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பார்ஸல் மட்டுமே வழங்க வேண்டும்.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்பதால், சென்னையில் இருந்து நாளை 1500 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021) மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும். ஆகவே சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!