/* */

'ஈகோவை விடுங்கள்' அனைத்து கட்சிகளுக்கும் திருமாவளவன் வலியுறுத்தல்

ஈகோவை விட்டு அனைத்து கட்சியினரும் ஒன்றிணைய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

HIGHLIGHTS

ஈகோவை விடுங்கள் அனைத்து கட்சிகளுக்கும் திருமாவளவன் வலியுறுத்தல்
X

விசிக தலைவர் திருமாவளவன்


நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால், அதற்கு ஈகோ பார்க்காமல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்திப்பில், அவர் கூறும்போது,

அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக நான்கில் ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. ஏற்கனவே ஆண்ட மாநிலங்களில் மீண்டும் ஆளும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஆனால் இது மகத்தான வெற்றி என பாஜகவினர் கொண்டடாடுகிறார்கள். பிரதமரே இமாலய வெற்றி என்கிறார். இதை வைத்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள். ஆனால் உத்திரபிரதேசத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சரிவை சந்தித்துள்ளது, பாஜவுக்கு சாதகம் என கூற முடியாது.

காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஒன்றாக சேராமல் இருப்பதாலும், மத வெறுப்பு அரசியலை கடைபிடிப்பதாலும் இந்த தோல்வி. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, வேலை வாய்ப்பு பற்றி பாஜக பேசவில்லை. அதற்கு மாறாக ஜெய்ஸ்ரீராம் என்றும் இஸ்லாமிய எதிர்ப்பு மூலம் மக்களை திசைதிருப்ப பார்க்கிறார்கள். இந்தியாவை சூழ்ந்துள்ள இந்த ஆபத்தை விரட்ட காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட அனைத்து அரசியல் அமைப்புகள் ஒன்று சேர வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலினின் சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு அனைத்து அமைப்புகளும் ஆதரவு அளிக்க வேண்டும். அனைத்து தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அதேபோல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் பாஜக வெற்றி பெற்று விடக் கூடாது. ஆணவ கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்.

மாநில அரசால் கூட இந்த சட்டத்தை இயற்ற முடியும். தமிழக முதலமைச்சர் இந்த சட்டத்தை இயற்ற வேண்டும். கோகுல்ராஜ் கொலை தீர்ப்பு, இது போன்ற ஆணவ கொலைகளுக்கு முடிவு கட்டும் என நினைப்பதாகவும் உச்சநீதிமன்றம் சாதிமத மோதல்களை தடுக்க தனி உளவுப் பிரிவு உருவாக்க வேண்டும்.

தமிழக முதல்வர் உடனடியாக இந்த தனிப்பிரிவை உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜக ஆட்சியில் இருக்கக்கூடாது. அதற்கு ஈகோவை பார்க்காமல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். எந்த கட்சியின் தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என்பது முக்கியமல்ல. அனைத்து மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டமைப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துவதாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் வருகை தந்த அதே நேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததால் இரு கட்சி தொண்டர்களும் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். பாரத் மாதா கி ஜே என பாஜகவினரும், ஜெய்பீம் என விசிகவினரும் முழக்கம் எழுப்பியதால் விமான நிலைய வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Updated On: 13 March 2022 9:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு