லண்டனில் என்ன படிக்கப்போகிறார் பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை..?

லண்டனில் என்ன படிக்கப்போகிறார்   பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை..?
X

அண்ணாமலை 

தமிழக அரசியலில் சிறிய பரபரப்பினை உருவாக்கி உள்ளது அண்ணாமலையின் லண்டன் பயணம்.

அண்ணாமலையின் பயணம் கட்சிப் பயணம் அல்ல. அரசுமுறை பயணமும் அல்ல. அவரின் குடும்ப விவகாரமும் அல்ல. இது ஒரு உலக அரசியல் தொடர்பான படிப்பு. சுமார் இருமாதம் அவர் அந்த படிப்பில் பங்கெடுப்பார். ஒரு தலைவனுக்கு பலவகையான அறிவுகள் ஞானங்கள் முக்கியம். அப்போது தான் அவன் தன் நாட்டையும் மக்களையும் சரிவர காக்க முடியும்.

மன்னராட்சியில் இந்த அரசியல் ஞானமெல்லாம் வழி வழியாக வந்தன. மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் அரசாள முடியும் என்பதில் எல்லாமே அடிபட்டு போயின. உலக குழப்பங்களுக்கு இதுதான் காரணம்.

இப்போது மெல்ல விழித்து கொண்ட உலக நாடுகள் அரசியலையும் ராஜதந்திரத்தையும் உலக நகர்வுகளுக்கேற்ற பாடமாக வைத்திருக்கின்றன. ஆனால் அவை அந்நாளைய மன்னர்களுக்கு போல் சிலருக்கே போதிக்கப்படுகின்றன. எல்லோருக்கும் அந்த கல்வி வழங்கப்படுவதில்லை.

அதற்கான தகுதி, திறமை, பின்னணி அவரின் அறிவு என எல்லாம் சோதிக்கப்பட்டே அந்த பயிற்சிகள் கொடுக்கப்படும். அப்படி ஒரு பயிற்சித்தான் " International relations - To understand and strengthen Geo Politics"

அதாவது புவியியல் சார்ந்த தேச பிராந்திய நலன்களை பாதுகாப்பது, இது மிக மிக முக்கியமான அரசியல் ஞானம். காலம் காலமாக இந்தியா கண்ட துயரங்களுக்கு இந்த ஞானம் இல்லாமல் போனதும், பின் இப்போது ஜெய்சங்கர் காலத்தில் திருப்பி அடிக்க இந்த ஞானத்தை இந்தியா பெற்றுக்கொண்டதும் காரணம்.

இலங்கையின் பழைய ஜாம்பவான்களான ஜெயவர்த்தனே, சிங்கப்பூரின் லீ குவான் யூ என பலர் இதில் கில்லாடிகள். அதாவது தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது, தன் பிராந்திய சவால் என்ன, இங்கு யாருக்கெல்லாம் விருப்பம், யாருக்கெல்லாம் கண் , இதை நமக்கு சாதகமாக சிக்கல் வராமல் மாற்றுவது எப்படி?

அல்லது இங்கு கொஞ்சம் விட்டுக்கொடுத்து இன்னொரு முக்கிய இடத்தில் தன் பிடியினை இறுக்குவது என்பது ஒரு கலை. பகவான் கிருஷ்ணன் வாழ்க்கையில் இதனை காணலாம். அவன் வாழ்வின் ஒரு பக்கம் அவன் மாபெரும் ரஜதந்திரி என்பதை காட்டும். அப்படித்தான் மெல்ல மதுராவினை கைபற்றியவன். எங்கிருந்தெல்லாம் ஆபத்து வரும் என கணித்து ஒவ்வொன்றாய் மிக, மிக தந்திரமாய் அழித்து போட்டு துவாரகையினை நிறுவினான்.

அவனின் தந்திரத்தில் இந்த புவிசார் அரசியலும் இருந்தது. கங்கை கரையில் துவாரகையினை நிறுவாமல் கடல் சூழ் நகரமாக நிறுவி வணிகம் முதல் பாதுகாப்புவரை அழகாக கணித்தவன் அவன். அவனே உலகில் முதலில் புவிசார் அரசியல் பாடம் நடத்தியவன்.

இன்று உலகம் ஆற்றங்கரையில் இருந்து துறைமுகங்களுக்கு மாறி இன்று துறைமுகங்கள் உலகாளும் காலத்தில் புவிசார் அரசியலை அன்றே செய்தவன் கண்ணன். அவன் ஏன் எல்லாவற்றுக்கும் வழிகாட்டி என்றால் இதனால்தான். அப்படிபட்ட புவிசார் அரசியல் எனும் ராஜதந்திர வகுப்புக்கள் இப்போதும் உண்டு. அதை கற்கத்தான் லண்டனுக்கு செல்கின்றார் அண்ணாமலை.

முதல்வர்களை சினிமாவிலும், அரசியல்வாதிகளின் வீட்டிலும் தேடும் மக்களுக்கு இந்த கல்வியின் அவசியம் தெரிந்திருக்க நியாயமில்லை. இந்த மாதிரி அரசியல் வகுப்புக்கு அடிக்கடி அண்ணாமலை அனுப்பபடுவது மகிழ்வான ஒன்று. அவரை தமிழகம் தாண்டி அகில இந்திய அளவில் வருங்கால முக்கியஸ்தராக ராஜதந்திரியாக உருவாக்குகின்றார்கள் என்பது தேசாபிமானிகளுக்கு பெரும் மகிழ்ச்சி.

இன்றைய தேதியில் இந்த பயிற்சியினை பெற தகுதியானார்கள் யாரும் உண்டா என்றால் அண்ணாமலையினை தவிர அந்த தகுதி யாருக்கும் இல்லை என்பதை ஒப்புகொள்ளத்தான் வேண்டும். ஆள்வோர், ஆண்டு சென்றோர், வாரிசுகள், இல்லை ஆளாளுக்கு ஒரு கொள்கை என குட்டிகரணம் அடிப்போர் என யாருக்கும் அந்த அடிப்படை தகுதி இல்லை.

அண்ணாமலை ஒருவருக்கு உண்டு. அவர் அந்த அடிப்படையில் லண்டனுக்கு செல்கின்றார். நல்ல முறையில் அவர் இந்த வகுப்பினை முடித்து நல்ல ஞானத்தோடு திரும்பி வரட்டும். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தென்னகத்தில் நல்ல புரிதலோடு வலம் வரும் அந்த அண்ணாமலையின் அரசியல் ஞானம் இன்னும் இதனால் சுடர்விடும். அந்த ராஜதந்திர கல்வியினை அவர் நலமோடு பெற்று வந்து தேசபணி செய்ய தேசம் வாழ்த்துகின்றது.

Tags

Next Story