தபால் ஒட்டுகள் இன்றுடன் நிறைவு..!
போஸ்டல் ஓட்டு (கோப்பு படம்)
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாப் சாகுவை ஜாக்டோ- ஜியோ சார்பாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்தித்து தபால் வாக்கு செலுத்துவதில் உள்ள சுணக்கங்கள் மற்றும் குளறுபடிகள் குறித்து விவாதித்தனர்.
கடந்த தேர்தல்களைப் போல் அல்லாமல் இந்த தேர்தலில் முதல் முறையாக வரும் 16.04.2024 மாலை 5 மணி வரை மட்டுமே தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களில் (Facilitation Centre) மட்டுமே பெறவும், செலுத்தவும் முடியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தீர்க்கமாக தெரிவித்தார். (கடந்த தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
நாளுக்கு முதல் நாள் வரை தபால் வாக்குகளை செலுத்தலாம் என்று இருந்தது) எனவே இதுவரை தபால் வாக்குகளை பெறாதவர்கள் மற்றும் தபால் வாக்குகளை பெற்று செலுத்தாதவர்கள் இன்று 16.04.2024 மாலை 5 மணிக்குள் அந்த பணியினை செய்து முடிக்கவும். அதற்குப் பிறகு தபால் வாக்குகளை, பெறவும் செலுத்தவும் வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
EDC Election Duty Certificate பொறுத்தவரை அதுவும் 16.04.2024 மாலை 5 மணிக்குள் பயிற்சி நடைபெறும் மையங்களில் Facilitation Centre பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். எனவே EDC சான்றிதழ்கள் பெறாதவர்களும் 16.04.2024 மாலை 5 மணிக்குள் பெற்றுக் கொள்ளவும்.
அடுத்த பயிற்சி வகுப்பு 18ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் EDC சான்றிதழழோ அல்லது தபால் வாக்குகளோ பெறவும் முடியாது செலுத்தவும் முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
மேலும், தபால் வாக்குகளை செலுத்துவதற்கென்று தனியாக இன்று 16ஆம் தேதி மதியம் சிறப்பு முகாமை நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை கனிவோடு பரிசீலிப்பதாக உறுதி அளித்து உள்ளார்கள்.
இன்று 16ஆம் தேதி மதியம் தபால் வாக்குகளை செலுத்துவதற்கென்றே சிறப்பு முகாம் நடைபெற அதிகம் வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பை தவறாமல் அனைவரும் பயன்படுத்தி தவறாமல் தபால் வாக்குகளைச் செலுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
EDC இருப்பவர்கள் ரிசர்வ் பணி வந்தால் அருகாமையில் உள்ள ஏதேனும் வாக்குச்சாவடி மையத்தில் தங்கள் வாக்குகளை செலுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
எனவே கடந்த தேர்தல்களைப் போல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 04.06.2024க்கு முன்னர் தங்களது வாக்குகளை செலுத்தலாம் என்று மெத்தனமாக இருந்து விட வேண்டாம். மேலும் 18ஆம் தேதி பயிற்சி வகுப்பில் தபால் வாக்குகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu