kuyili freedom fighter in tamil-குயிலி, வேலுநாச்சியாரை எப்படி காப்பாற்றினார்..? வரலாறு அறிவோம் வாங்க..!

kuyili freedom fighter in tamil-வீரமங்கை குயிலி
kuyili freedom fighter in tamil
குயிலி, ராணி வேலு நாச்சியாரின் இராணுவத் தளபதி ஆவார். அவர் 18 ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான பிரசாரங்களில் பங்கேற்றார். அவர் இந்திய வரலாற்றில் முதல் தற்கொலை செய்துகொண்டு நாட்டைக்காப்பாற்றிய "முதல் பெண் தியாகி " என்று கருதப்படுகிறார்.
குயிலி வாழ்க்கை வரலாறு:
குயிலியின் தந்தை பெயர் பெரிய முத்தன், தாய் ராக்கு. தாய் ராக்கு விவசாயத் தொழிலில் மட்டுமல்ல; வீரத்திலும் கெட்டிக்காரர். யாராலும் அடக்கமுடியாத காளை ஒன்று, அவர்களின் விவசாய சாகுபடியை அழித்துக்கொண்டிருந்தது. அந்தக் காளையை அடக்கப்போய் அதன் கொம்பு குத்தியதில் அவர் உயிரிழந்தார்.
kuyili freedom fighter in tamil
நீண்ட காலமாக பெரிய முத்தன் ராக்கு தம்பதிக்கு குழந்தையில்லாமல், குயிலியைப் பெற்றதால் குயிலி மீது தந்தை முத்தனுக்கு குயிலி மீது கொள்ளைப்பாசம்.
மனைவி ராக்கு இறந்தபின்பு அந்த கிராமத்தில் இருக்கப் பிடிக்காமல், மனைவியின் துக்கத்தை மனதில் சுமந்துகொண்டு குயிலியோடு சிவகங்கை அருகே முத்துப்பட்டி என்ற கிராமத்தில் குடியேறினார். அங்கிருந்த தலித் மக்களோடு சேர்ந்து அரண்மனைக்கு தோல் தைக்கும் வேலைக்குச் செல்கிறார்.
வேலுநாச்சியாரின் வீரம் குறித்து குயிலிக்கு நிறைய சொல்லி வளர்த்தார். முத்தன் இளம் வயதுமுதலே வேலுநாச்சியாரின் வீரத்தையும் விவேகத்தையும் கூறி வளர்த்ததால் குயிலியின் இரத்தத்திலும் வீரம் விளைந்துகிடந்தது. குயிலி வீரபெண்மணியாக வளர்ந்தார்.
அரண்மனைக்குள் அனுமதித்த வேலுநாச்சியார்
ஒரு கட்டத்தில் குயிலி, வேலுநாச்சியாரைப் பார்த்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தார். ஆனால் பாதுகாவலர்களோ குயிலியை அரண்மனைக்குள் விட மறுத்தனர்.
பாதுகாவலர்களிடம் தந்தை முத்தனும் கேட்டுப்பார்த்தார். ஆனால், குயிலியால் வேலுநாச்சியாரை சந்திக்க முடியவில்லை. இந்தத் தகவல் எப்படியோ வேலுநாச்சியாரின் காதை எட்டுகிறது. உடனே முத்தனையும், குயிலியையும் அழைத்துவராகி செய்து,
"நீங்கள் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். உங்களுக்கு அனுமதி உண்டு" என்று கூறுகிறார். காலப்போக்கில் வேலுநாச்சியாரின் அன்பிற்குரியவராக மனதில் இடம்பிடித்தார் குயிலி. வேலுநாச்சியாருக்கு சிறந்த ஒற்றர் தலைவனைப்போல இருந்து செயல்பட்டார் குயிலியின் தந்தை முத்தன்.
வேலுநாச்சியாருடன் குயிலி இருக்கிறார். தன் தந்தையைப் போலவே அவ்வப்போது சிவகங்கைப் பகுதிக்குள் என்ன நடக்கிறது என்கிற தகவல்களை வேலுநாச்சியாருக்கு பகிர்கிறார் குயிலி. இதனால் பெரும் நம்பிக்கைக்குரிய உளவாளி என பெயர்பெற்றார்.
kuyili freedom fighter in tamil
குயிலி உளவு பார்க்கும் செய்தி ஆங்கிலேயர்களுக்குத் தெரிய வருகிறது. 'யார் அந்த குயிலி?' என்ற விசாரணை நடக்கிறது. ஆனால் அவர்கள் நினைத்தது போல குயிலி பற்றி எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
சிவகங்கையைச் சுற்றியுள்ள மக்கள் யாரும் வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்பதை வெள்ளையர்கள் தெளிவாக அறிந்துகொண்டனர். எப்படியாவது குயிலியைக் கொலை செய்யவேண்டும் என்று ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினர்.
சிலம்பாட்ட ஆசிரியரைக் கொன்ற குயிலி
ஒருநாள் இரவு நேரத்தில் வேலுநாச்சியாரின் சிலம்பாட்ட ஆசிரியர் வெற்றிவேல் என்பவர், ஒரு ஓலையும், கையில் பையுமாக வந்து, "இந்த ஓலையை சிவகங்கை அருகேயுள்ள ஒரு இடத்தைக்குறிப்பிட்டு அங்கே ஒப்படைத்துவிடு. அதற்குக் கூலியாக இந்தப் பையை வைத்துக்கொள்" என்று கூறினார்.
அதை மறுக்க முடியாமல் குயிலி அந்த ஓலையை வாங்கிக்கொண்டார். அந்த ஓலையைப் பிரித்துப் படித்தபோதுதான், நாச்சியாரின் போர் தந்திரங்களும், நுட்பங்களும் அதில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே சிலம்பாட்ட ஆசிரியர் வெற்றிவேல் தங்கியிருந்த அறைக்குப் போனார் குயிலி. இனியும் தாமதித்தால் நாச்சியாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எண்ணிய குயிலி, உடனே வெற்றிவேலின் உயிரை ரத்த வெள்ளத்தில் மிதக்கவைத்தாள். நாச்சியார் ஓடிவந்து பார்க்கிறாள் குயிலியின் கையில் ஓலை; மறுகையில் கொடுவாள் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேலுநாச்சியார், குயிலியின் கையில் இருந்த ஓலையை வாங்கிப் படித்துப் பார்த்தவுடன் மெய்சிலிர்த்துப் போய் நின்றார்.
உடனே குயிலி நம்பிக்கைக்குரிய வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு மெய்க்காப்பாளரை ஏமாற்றி வேலுநாச்சியாரை கொலைசெய்ய ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினார்கள்.
வேலுநாச்சியாரை காத்த குயிலி
ஒருநாள் வேலுநாச்சியார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.அப்போது மர்ம உருவம் ஒன்று வேலுநாச்சியாரின் அறைக்குள் நுழைந்தது. அந்த உருவம் வேலுநாச்சியார் மீது கத்தியை வீசியபோது அடுத்தநொடியில் குயிலி, தன் கையால் தடுத்ததும் கத்தி கீழே விழுந்தது.
kuyili freedom fighter in tamil
அந்தச் சத்தத்தில் வேலுநாச்சியார் திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது குயிலியின் கையில் இரத்தம் சொட்டியது. குயிலி வலியால் துடித்துக்கொண்டிருந்தபோது வேலுநாச்சியார் தனது சேலையால் இரத்தத்தைத் துடைத்து மருந்துபோட்டு குயிலியைக் காப்பாற்றினார், நாச்சியார். சிறு வயதிலேயே தாயை இழந்த குயிலிக்குத் தாயாக இருந்து பாதுகாத்து வந்தவர் வேலுநாச்சியார்.
இந்தச் செய்தியெல்லாம் ஆங்கிலேயர்களுக்குச் செல்கிறது. குயிலிக்கும், வேலுநாச்சியாருக்கும் எதிராக மக்களைத் திரட்ட திட்டம் தீட்டுகிறார்கள். அப்போது, மக்களிடம் பிளவை ஏற்படுத்த சாதிப் பாகுபாட்டை ஆயுதமாக கையில் எடுத்தனர் ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயர்கள் தலித் மக்களின் விவசாய நிலங்களையும் ஆடு, மாடுகளையும் அபகரித்து கொடுமைப்படுத்துகிறார்கள்.
நடக்கும் சம்பவங்களை வைத்து ஆலோசித்த நாச்சியார், “எந்தநேரத்திலும் குயிலியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்” என்று கருனார். பெண்கள் படைக்குத் தளபதியாக குயிலியை நியமித்தார். வேலுநாச்சியாருக்கு குயிலியும், குயிலிக்கு வேலுநாச்சியாரும் பாதுகாப்பு அரணாக ஒருவருக்கொருவர் இருந்தார்கள்.
வெள்ளச்சி நாச்சியார் சிறைபிடிப்பு
பிரான்மலையில் இருந்து வெள்ளச்சி நாச்சியாரை, ஆங்கிலேயர்கள் சிறைப்பிடித்து வேலுநாச்சியாரை வீழ்த்துவது என்பது ஆங்கிலேயர்களின் திட்டம். அதன்படி வெள்ளச்சி நாச்சியாரை சிறைப்பிடித்துக்கொண்டு, காட்டுவழியாக ஆங்கிலேயர்கள் வரும் செய்தி குயிலிக்கும், நாச்சியாருக்கும் கிடைத்தது.
உடனே இருவரும் காட்டுக்குள் விரைந்தார்கள். நடுக்காட்டில் நுழைந்ததும் ஆங்கிலேய சிப்பாய் வேலுநாச்சியாரை நோக்கி துப்பாக்கியை நீட்ட, உடனே குயிலி வாளைக்கொண்டு அவன் கையை வெட்டினார். அடுத்த கணமே வேலுநாச்சியாரின் வாள், அந்த சிப்பாய் தலையைச் சீவியது.
kuyili freedom fighter in tamil
நாச்சியாரை பாதுகாப்பாக மீட்டு, விருப்பாச்சி அரண்மனைக்குக் கொண்டு வந்தனர். வேலுநாச்சியார் சிவகங்கைச் சீமை மக்களுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார். மக்கள் படை, திப்பு சுல்தான் படை, கோபால் நாயக்கர் படை, மருது சகோதர்கள் படை, குயிலி தலைமையில் வாள்படை, வளரி படை, கவன்கற்படை, வெட்டரிவாள் படை, வீச்சரிவாள்படை, சக்கந்தி வைரவன்படை, பெரியஉடையத்தேவர் படை என அலைகடலென விருப்பாச்சிக்கு விரைந்தனர். உடல்நலம் குன்றியிருந்த முத்தன், தனியாக ஒரு படையைத் திரட்டி, அந்தப் படைகளோடு இணைந்து சென்றார்.
தற்கொலை படையான குயிலி
வேலுநாச்சியாருக்கு எந்தநேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்பதால், யாரையும் நம்பமுடியாத சூழ்நிலையில் குயிலி தானே ஒற்றனாக களமிறங்கினார். சிவகங்கை அரண்மனையில் ஆங்கிலேயர்கள் நவீன ஆயுதங்களும் கருமருந்து பொட்டலங்களும் வெடி பொருள் மூட்டைகளும் வாங்கிக் குவித்து வைத்திருந்தனர்.
இந்தத் தகவல் குயிலிக்கு கிடைத்தது. அந்தத் தகவலை தன் தந்தை முத்தனிடம் கேட்டு உறுதிசெய்து கொண்டார். உடனே ஆயதக்கிடங்கில், தான் தீ வைத்துவிட்டு வருவதாகச் சொன்னதற்கு முத்தன் அனுமதி மறுத்துவிட்டார்.
இவரைப்போன்றெ வேலுநாச்சியாரும் "நீ சிறிய பெண்ணாக இருந்து இதை செய்யவேண்டாம்." என்று அனுமதி மறுத்தார். ஆனால், குயிலியோ எப்படியாவது ஆயுதக்கிடங்கை அழித்துவிடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.
அன்று விஜயதசமி நாள். அரண்மனை ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் விழாக்கோலம் பூண்டிருந்தது. பெண்கள் படையினர் பழக்கூடைகள் மற்றும் பெரிய மாலைகளுக்குள் சூரிக்கத்தி, கட்டாரி போன்ற ஆயதங்களை மறைத்துச் சென்றார்கள்.
அரண்மனைக்குள் ஆங்கிலேயப் படைகளுடன் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் உள்ளுர் ஆங்கிலப் படையினரும் இருந்தார்கள். அந்தப் படையில் தமிழர்கள்தான் அதிகம் என்பதால் ஆயுதபூஜை அன்று ஆயுதங்களை வைத்து சாமி கும்பிடுவது மரபு. அந்த சமயம் பார்த்து ஆயுதக்கிடங்கில் விளக்குக்கு ஊற்றும் எண்ணெயை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு 'வீரவேல் வெற்றிவேல்' என்று உரத்த குரலில் குயிலி முழக்கமிட்டதும் ஆங்கிலேயர்கள் நிலைகுலைந்து போனார்கள்.
kuyili freedom fighter in tamil
தன் உடலில் தீவைத்துக்கொண்ட குயிலி, ஆயுதக் கிடங்குக்குள் குதித்தார். ஆயுதங்கள் முற்றிலும் கருகி சாம்பலாகின. குயிலி தற்கொலைப்படை போராளியாக மாறினார். குயிலியின் தியாகத்தால் சிவகங்கைச் சீமை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.
இந்தத் தகவல் வேலுநாச்சியாருக்கு தெரியவந்ததும் கதறி அழுதார். குயிலியின் இழப்பை வேலுநாச்சியாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குயிலியின் இழப்பால் மனம் வாடி இருந்தார் வேலுநாச்சியார்.
இறப்பு
குயிலி 1780ம் ஆண்டில் தற்கொலைத் தாக்குதலுக்குப் பெயர் பெற்றவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் கோட்டையைத் தாக்கும் போது, தன் உடலில் நெய் தடவி , தன்னைத் தானே தீயிட்டுக் கொண்டு, கிழக்கிந்திய கம்பெனியின் ஆயுதக் களஞ்சியத்தை அளித்து, வேலு நாச்சியாருக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரப்பெண்களில் வேலுநாச்சியாரும், குயிலியும் முக்கியமானவர்கள். அவர்களின் போர்த் தந்திரம், வீரம், விவேகம், சமூகநீதி, தாய்நாட்டுப்பற்று ஆகியவை நம் கண்முன் தோன்றி நிற்கின்றன.
நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி தினத்தன்றுதான், சிவகங்கை அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதக் கிடங்குக்குள் குயிலி தன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி தீ வைத்துக்கொண்டு குதித்தார். இதனால், ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கு முழுவதுமாக அழிக்கப்பட்டது. குயிலி ஆயுதக்கிடங்கை அழித்த தினம் செப்டம்பர் 30.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu