சூளகிரியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

சூளகிரியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
X
ஒசூர் அடுத்த சூளகிரியின் குடிநீர் கேட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியின் கலைஞர் நகர் பகுதியில் கடந்த ஒருமாதமாக முறையாக குடிநீர் விநியோகிக்கவில்லை எனக்குற்றம்சாட்டி அப்பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சூளகிரி - பேரிகை சாலையில் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்

வருவாய்த்துறையினர்,காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாக உறுதியளித்த பின்பு சாலை மறியலை கைவிட்டு சென்றனர்

இதனால் அப்பகுதியில் அரை மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்