சூளகிரி அருகே நிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை

சூளகிரி அருகே நிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை
X

காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய கேரட் தோட்டம்.

சூளகிரி அருகே விவசாய நிலங்களை சூறையாடும் காட்டுப்பன்றிகளால் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த அங்கொண்டப்பள்ளியில் நாராயணப்பா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரண்டு ஏக்கரில் கேரேட் பயிர் சாகுபடி செய்துள்ளார்.

இந்நிலையில் வன விலங்குகள் வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் உணவுக்காக நுழைந்து காரட், முள்ளங்கி , கிழங்குகள் உள்ளிட்டவையை திண்றும் கால்களால் மிதித்து சேதப்படுத்தி வருகிறது.

அங்கொண்டப்பள்ளியில் நாராயணப்பா என்பவரது விவசாய நிலத்தில் சுமார் ஒரு மாதமாக காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் கேரட் தோட்டத்தில் புகுந்து பயிரிடப்பட்ட கேரட் பயிர்களை நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்ப்படுத்தியுள்ளது.

இதனால் வன விலங்குகளிடம் இருந்து விவசாய நிலைத்தை பாதுகாத்துக்கொள்ள சூரியசக்தி மின்வேலி அமைத்து தர அரசு உதவ வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story