வேப்பனப்பள்ளி அருகே சுற்றிதத் திரியும் அதிசய வெள்ளை காகம்: பொதுமக்கள் வியப்பு

வேப்பனப்பள்ளி அருகே சுற்றிதத் திரியும் அதிசய வெள்ளை காகம்: பொதுமக்கள் வியப்பு
X

 வெள்ளை காகம். 

வேப்பனப்பள்ளி அருகே சுற்றி திரியும் வெள்ளை காகம் பொதுமக்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் கூட்டு சாலையில் சில தினங்களாக கருப்பு நிற காகங்களுடன் வெள்ளை நிறத்தில் பறவை ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்துள்ளது.

இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஏதோ ஒரு விசித்திரப் பறவை வந்துள்ளதாக புரளிகள் பரவியது. பின்பு உற்று பார்த்தபோது காகங்களுடன் சுற்றித்திரிந்த பறவை வெள்ளை நிற காகம் என தெரிய வந்தது.

வெள்ளை நிறத்தில் காகம் இருப்பதையும் கண்டும் பொதுமக்களும் கிராம மக்களும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பின்பு இந்த வெள்ளை நிற காகமும் கருப்பு நிற காகங்களுடன் சேர்ந்து கொண்டு தற்போது இப்பகுதியில் சுற்றி வருகிறது. பேச்சு வாக்கில் வெள்ளை நிற காகம் பறக்கிறது என்று சொல்லும் வார்த்தைக்கு ஏற்ப தற்போது இங்கு இருக்கும் வெள்ளை நிற காகத்தை காண சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் கிராம மக்களும் வந்து கண்டு ரசித்து உணவுகளை வழங்கி செல்கின்றனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி