4 ஆண்டுகளுக்குப் பின் மார்க்கண்டேயன் நதியில் நீர்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி
மாரசந்திரம் தடுப்பணை.
வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகா, ஆந்திர மாநிலத்திலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கனமழை கொட்டியது இதனால் மார்க்கண்டேயன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநில எல்லைப் பகுதியான முத்தியால்மடுகு என்ற மலைப் பகுதியில் வெளியேறும், சிறுசிறு ஒடைகள் மூலம் உருவாகும் மார்கண்டேயன் நதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தீர்த்தம், பாலனப்பள்ளி, சிக்கரிப்பள்ளி வழியாக மாரசந்திரம் தடுப்பணையை வந்தடைகிறது.
மாரசந்திரம் தடுப்பணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் மார்கண்டேயன் நதி, இடது புற கால்வாய் வழியாக ஜீனூர், திப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, சாமந்த மலை வழியாக கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரியை வந்தடைகிறது. இந்த மார்கண்டேயன் நதி மூலம் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாசனவசதி பெருகிறது.
4 ஆண்டுகளாக மார்கண்டேயன் நதி வறண்டு கிடந்தாதால் வேப்பனஹள்ளி சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிக்கும் கீழ் சென்றது. இதனால் தண்ணீர் பஞ்சத்தால் கிராம மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்கண்டேயன் நதியில் ஏற்பட்டுள்ள நீர் வரத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu