அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்
X
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை முன்னாள் எம்பி., அசோக்குமார் திறந்து வைத்தார்.

கோடைவெயிலால் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் வேப்பனஹள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், குருபரப்பள்ளியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

இந்த தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி.,யும், கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோக்குமார் தலைமை வகித்து, தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர் மற்றும் முககவசம் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, வேப்பனஹள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சைலேஷ்கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!