வேப்பனப்பள்ளி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் மருத்துவ பொங்கல் விழா

வேப்பனப்பள்ளி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் மருத்துவ பொங்கல் விழா
X

பொங்கல் கொண்டாடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

வேப்பனப்பள்ளி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மருத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா வேப்பனபள்ளிவிடுதலை சிறுத்தைகள் ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்றது.

விழாவிற்கு வேப்பனப்பள்ளி விடுதலை சிறுத்தைகள்ஒன்றிய செயலாளர் சேவாரத்தனம்.சிறுத்தை ராஜா.தலைமை வகித்தார்.

விழாவில்இந்து, கிருஸ்துவ, இஸ்லாமியர் உள்ளிட்ட மதத்தினர் இணைந்து சமத்துவ பொங்கவிட்டு அனைவருக்கும் வழங்கினர்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு முக்கவசம் வழங்கி கொரானா நோய் தடுப்பு விழிப்புணர்வை ஒன்றிய விடுதலை அமைப்பினர் ஏற்படுத்தினர்.

தி.மு.க .ஒன்றிய செயலாளர் ரகுநாத், வேப்பனப்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் கலில், ஒன்றிய குழுதுணைத்தலைவர் நாராணன், முன்னாள் கவுன்சிலர்கள் அப்துல்கலாம், சேகர், நிசார்பாய், முபின், அப்துல்காதர் ஜிலானி, ஆந்திரபாய், யாராப், ரியாஸ் பாஷா, சிதம்பரம் சபிர், ராயன், சுப்பு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழா நிறைவில் ஒன்றிய பொருளாலர் ரவி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!