நடந்து சென்றவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

நடந்து சென்றவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து
X
சூளகிரி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வேம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் காலை சூளகிரி பகுதியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ இவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் சூளகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சூளகிரி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!