சூளகிரியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி 3 இளைஞர்கள் உயிரிழப்பு

சூளகிரியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி 3 இளைஞர்கள் உயிரிழப்பு
X

சூளகிரி அருகே விபத்து நடந்த பகுதி.

சூளகிரியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி 3 இளைஞர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில்ஓசூரை நோக்கி லாரி சென்றுகொண்டிருந்தது. பின்னால் வந்த இருசக்கர வாகனம் லாரியை முந்திச் செல்லும்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கினர்.

இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று பேரும் தலை நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்து போன இளைஞர்கள், ஓசூர் அரசனட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார், இளைய பெருமாள், சக்திவேல் என தெரியவந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஓசூர் ஏ.எஸ்.பி., அரவிந்தன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!