சூளகிரி அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

சூளகிரி அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
X
ஓசூர் சூளகிரி அருகே, கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோனேரிப்பள்ளி அருகே உள்ள நல்லகானகொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகன் சுரேஷ் ( 19). இவர் ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு கணிதம் படித்து வந்தார்.

இந்த நிலையில், சுரேஷ் எப்போதும் செல்போன் பயன்படுத்தி கொண்டும் சிலரிடம் பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை சுரேசின் தாய் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவர் சுரேஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture