சூளகிரி அருகே சீனிவாசப்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

சூளகிரி அருகே சீனிவாசப்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
X

சீனிவாச பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சூளகிரி அருகே சீனிவாசப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்று வருகிறது குறிப்பாக தமிழகத்தின் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாள் திருக்கோவில் ஆகிய திருக்கோயில்களில் வெகு விமர்சையாக சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது

அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி தினசரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது கடைசி நாளான நேற்று சீனிவாச பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து திருக்கோயிலில் அதிகாலை 3 மணியிலிருந்து திருப்பாவை படிக்கட்டு, பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சரியாக அதிகாலை 5 மணிஅளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்பொழுது திரளான பக்தர்கள் வந்திருந்து கோவிந்தா கோவிந்தா என முழக்கங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக நுழைந்து சென்று வழிபாடுகளை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகத்தினர் சார்பில் 10 ஆயிரம் லட்டுகள் மற்றும் சாத்துக்குடி மற்றும் வாழைப்பழங்கள் சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!