மேம்பாலம் அமைத்துத்தரக்கோரி பள்ளி மாணவர்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டம்

மேம்பாலம் அமைத்துத்தரக்கோரி பள்ளி மாணவர்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டம்
X

மேம்பாலம் அமைத்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேம்பாலம் அமைத்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டம் மூன்று மணி நேரத்திற்கு பிறகு கைவிடப்பட்டது

மேம்பாலம் அமைத்து தரக்கோரி சாலையோரம் அமர்ந்து மூன்று மணி நேரம் போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்களுடன் அதிகாரிகளின் நடத்தி பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிறகு கைவிடப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மேலுமலை அருகே உள்ள சின்னகானப்பள்ளியை சேர்ந்த, 18 வயது மாணவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், டிப்ளமோ முதலாமாண்டு படித்து வந்தார்.கடந்த, 24ம் தேதி மாலை கல்லூரி முடிந்து, சாமல்பள்ளம் பகுதியில் ஊருக்கு செல்ல, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி மோதி பலியானார். இதேபோல், அடிக்கடி விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், மாணவ, மாணவியரை பள்ளி, கல்லூரிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பஸ் ஸ்டாப்பில் இறங்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையை கடக்க மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என சாமல்பள்ளம் பள்ளி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைதியான முறையில் அமர்ந்து போராட்டத்தில் ஈட்டுப்பட்டனர்.மேலும் மாணவர்கள் கையில் பள்ளி மாணவர்களின் உயிர் காக்கபட வேண்டும், மற்றும் இப்பகுதியில் உள்ள சாமானிய மக்களின் உயிர்களும் காக்கப்பட வேண்டும் என வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி வந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த சூளகிரி வட்டாட்சியர் நீலமேகம் மற்றும் வேப்பணப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார் இதை ஏற்கமறுத்த மாணவர்கள் சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் தற்போது வரவேண்டும் என்றும் உடனடியாக விபத்துக்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் இப்பகுதிக்கு உயர்மட்ட நடைமேம்பாலம் அமைத்து தரக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈட்டுப்பட்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 30 கோடி ரூபாயில் ஒருமாதத்திற்குள் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தத்தின் பேரில் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!